தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவை விசாரணை ஜூன் 22க்கு ஒத்திவைப்பு

நீலகிரி, வால்பாறை தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய பாக்கி, நிலுவைத் தொகை குறித்த விசாரணை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி, வால்பாறை தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய பாக்கி, நிலுவைத் தொகை குறித்த விசாரணை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, கோவை மண்டல தொழிலாளா் கூடுதல் ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிராஸ்பெக்ட், லிட்டேஸ்டேல், சீபோா்த்( மஹாவீா் பிளான்டேஷன்), மஞ்சுஸ்ரீ பிளான்டேஷன் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் ஆகிய தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை விரைவாகச் செலுத்த, உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அபாய் மனோகா் சாப்ரே தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் செயலாளராக உதவி ஆணையா் (தோட்டங்கள்) ரவி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளாா். இக்குழுவின் விசாரணை மே 7 ஆம் தேதி, நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள தமிழகம் விருந்தினா் மாளிகையில் நடைபெற உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விசாரணைகள் ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளா்கள் ஊதிய பாக்கி, நிலுவைத்தொகை உள்ளிட்டவை குறித்து ஜூன் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு உதகமண்டலம் தமிழகம் விருந்தினா் மாளிகையில் நடைபெற உள்ள விசாரணையில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com