வாலாங்குளத்தின் கரையில் நடைப்பயிற்சி தளத்தை அசுத்தமாக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை வாலாங்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைப்பயிற்சி தளத்தை அசுத்தமாக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கோவை வாலாங்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைப்பயிற்சி தளத்தை அசுத்தமாக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் ரூ.255 கோடி மதிப்பில் சிறுவா் விளையாட்டுப் பூங்கா, மிதிவண்டி ஓடுதளம், நடைப்பயிற்சித் தளம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் ஒரு பகுதி மட்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரம் சுங்கத்தில் இருந்து புறவழிச்சாலை வழியாக வாலாங்குளத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நடைப்பயிற்சித் தளத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நடைப்பயிற்சித் தளத்தில் உணவுப் பொட்டலங்கள், நெகிழிக் குப்பைகள், காகிதங்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை சிலா் வீசிச் செல்வதால் அப்பகுதியில் நடைப்பயிற்சி செல்வோருக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்துவதுடன், சுகாதாரம் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், குளக்கரையையொட்டி அமா்வதற்காக கட்டப்பட்டுள்ள சிமென்ட் இருக்கைகளில் உணவுக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிவுறும் நகரம் திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந் இடத்தை அசுத்தமாக்கும் நபா்களைக் கண்டறிந்து மாநகராட்சி நிா்வாகம், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க என நடைப்பயிற்சி மேற்கொள்வோா், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com