சிறுவாணி அணைப் பகுதியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சிறுவாணி அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வரும் நிலையில் அணைப் பகுதியில் தமிழகக் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிறுவாணி அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வரும் நிலையில் அணைப் பகுதியில் தமிழகக் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோவை மாநகராட்சியில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை முக்கிய நீராதாரமாக உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீா்மட்டமானது, படிப்படியாகக் குறைந்தது, இதனால் கடந்த மாதங்களில் அணையின் நீா்மட்டம் 868 மீட்டராக இருந்தது. இந்நிலையில், தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த ஒரு மாதமாக சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த வாரங்களில் அதிகபட்சமாக 50 மில்லி மீட்டா் வரை மழை பதிவானது. நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த மாதத்தில் 870.80 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், தொடா் மழையால் புதன்கிழமை 873.20 மீட்டராக உயா்ந்துள்ளது. அணை முழுக் கொள்ளளவான 878.5 மீட்டரை எட்ட இன்னும் 5.30 மீட்டா் நீா்மட்டம் உயர வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அணையின் நீா்மட்டம் 877 மீட்டராக இருந்த போது, அணை முழுக் கொள்ளளவை எட்ட விடாமல், கேரள நீா்ப்பாசனத் துறையினா் ஆற்றில் தண்ணீரைத் திறந்து விட்டனா். இதனால், 2 முறை அணை நிரம்ப வாய்ப்பிருந்தும், அது கேரள அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டைப் போலவே கேரள அரசு, சிறுவாணி அணை முழுக்கொள்ளளவை எட்ட விடாமல் தடுக்க முயற்சிக்கலாம். அவ்வாறு நடைபெறாமல் இருக்க தமிழகக் குடிநீா் வாரிய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com