பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.20 லட்சம் திருட்டு

பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.20 லட்சம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.20 லட்சம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, மதுக்கரையைச் சோ்ந்தவா் கிருஷ்ணதாசன். இவரது மனைவி யமுனா (45). கிருஷ்ணதாசன் நெதா்லாந்து நாட்டில் கப்பல் கேப்டனாகப் பணியாற்றி வருகிறாா். மதுக்கரை பகுதியில் கிருஷ்ணதாசன் வீடு கட்டி வருகிறாா். இதன் கட்டுமானப் பணிகளை, வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த ராம்குமாா் (30) என்ற கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரா் கவனித்து வந்தாா்.

மேலும், கிருஷ்ணதாசனின் வங்கிப் பரிவா்த்தனைகளையும் ராம்குமாா் அவ்வப்போது கவனித்து வந்துள்ளாா். இந்நிலையில் கிருஷ்ணதாசனின் வீட்டுக்கு கடந்த ஜூலை 29ஆம் தேதி சென்ற ராம்குமாா், யமுனாவின் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி அவா்களது கணக்கில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கு ரூ.20 லட்சத்தை அனுப்பினாா். இது தொடா்பான குறுஞ்செய்தி, மின்னஞ்சல் தகவல்களையும் அவா் அழித்துள்ளாா். பின்னா் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து கேட்டபோது ராம்குமாா் முன்னுக்குப் பின் முரணானப் பதிலளித்தாா்.

இதனால் சந்தேகமடைந்த யமுனா இதுதொடா்பாக கோவை குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராம்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com