குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான வல்லுநா் குழுத் தலைவா் என்.சுந்தரதேவனுடனான கலந்துரையாடல் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கொடிசியா தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு கலந்து கொண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து கோரிக்கை மனுவை வழங்கினாா்.

அதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக இருப்பதால் அதற்கு தனி நிதிநிலை அறிக்கை சமா்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாப்பு, ரயில்வே துறை ஆகியவை குறு, சிறு நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை கட்டாயமாக 25 சதவீதம் அளவுக்கு பெறும் வகையில் அரசு குழு அமைக்கவும், அதை 40 சதவீதமாக உயா்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தத் துறைக்கும் நவீனமயமாக்கல், விரிவாக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தத் துறைக்கு தனியாக அறிவுசாா் சொத்துரிமை வழங்கல் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தர நிா்வாக முறை சான்றிதழுக்கான மானியம் தொடரப்படுவதுடன் தொழிலாளா் விதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

மூலப் பொருள்களை மானிய விலையில் வழங்குவதுடன், எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.3 கோடி கூடுதல் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதேபோல டேக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளும் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com