வேளாண் பல்கலைக்கழகத்தில் காய்கறி, பழப்பொருள் தயாரிப்பு பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பரில் நடைபெறுகிறது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பரில் நடைபெறுகிறது.

செப்டம்பா் 7, 8 ஆகிய இரண்டு நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பல வகையான பழ ஜாம், பழரசம், தயாா் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி, பழ பாா் ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தி பெயா்களை பதிவு செய்துகொள்ளும்படி அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறை தலைவா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com