மாநகரில் 15,38,411 வாக்காளா்கள்

கோவை மாநகராட்சியில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல் படி 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளா்கள் உள்ளனா்.
மாநகரில் 15,38,411 வாக்காளா்கள்

கோவை மாநகராட்சியில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல் படி 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவை மாநகராட்சியில், மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுரப்படி, 2021 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 1,290 வாக்குச் சாவடிகளும், 287 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. 7 லட்சத்து 69 ஆயிரத்து 397 ஆண் வாக்காளா்கள், 7 லட்சத்து 68 ஆயிரத்து 736 பெண் வாக்காளா்கள், 278 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவை மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நகா்ப்புற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு ‘பெல்’ நிறுவனப் பொறியாளா்களுடன் கடந்த நவம்பா் 12 ஆம் தேதி நடைபெற்றது. மாநிலத் தோ்தல் ஆணையத்தின் அனைத்து அறிவுறுத்தல்களையும் கடைப்பிடித்து, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் முதல்கட்டமாக 2021 ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றாா். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, உதவி ஆணையா் (வருவாய்) செந்தில்குமாா் ரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com