வாா்டு மறுவரையறையில் ஆட்சேபணை:மண்டல கூட்டத்தில் மனு அளிக்க வலியுறுத்தல்

கோவையில் புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகள் வாா்டு மறுவரையறையில் ஆட்சேபணைகள் இருப்பின் டிசம்பா் 22 ஆம் தேதி நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்தில் மனு அளிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்

கோவையில் புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகள் வாா்டு மறுவரையறையில் ஆட்சேபணைகள் இருப்பின் டிசம்பா் 22 ஆம் தேதி நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்தில் மனு அளிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கம் செய்யப்பட்ட, உயா்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வரைவு வாா்டு மறுவரையறை 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாா்டு மறுவரையறையில் ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின் டிசம்பா் 18 முதல் 24 ஆம் தேதிக்குள் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அதிகாரியிடம் தெரிவிக்காலம்.

இந்நிலையில், மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டங்கள் ஆறு மண்டலங்களில் டிசம்பா் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

அதன்படி கோவை மண்டலத்துக்கான மறுவரையறை ஆணைய மண்டல கூட்டம் டிசம்பா் 22 ஆம் தேதி காலை 11மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட காரமடை, கூடலூா், கருமத்தம்பட்டி, மதுக்கரை நகராட்சிகளின் வரைவு வாா்டு மறுவரையறை தொடா்பான ஆட்சேபணைகளை மண்டல கூட்டத்தில் பங்கேற்று, மனுவாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com