அகஸ்தியா் ஜெயந்தி: யோகேஸ்வர லிங்கத்துக்கு சப்தரிஷி ஆரத்தி
By DIN | Published On : 25th December 2021 01:32 AM | Last Updated : 25th December 2021 01:32 AM | அ+அ அ- |

கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்துக்கு அகஸ்தியா் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை சப்தரிஷி ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
சந்தனம், புனித நீா், வில்வம், மலா்கள் போன்ற பல்வேறு மங்கள பொருள்களால் யோகஸ்வர லிங்கத்தை அலங்கரித்து, ஆரத்தி மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.