‘மாவட்டத்தில் 72.75 % போ் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனா்’

கோவை மாவட்டத்தில் 72.75 சதவீதம் பேருக்கு 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தி மாநில அளவில் 2 ஆவது இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.கோவை மாவட்டத்தில் 72.75 சதவீதம் பேருக்கு 2 தவணைகள் தடுப்

கோவை மாவட்டத்தில் 72.75 சதவீதம் பேருக்கு 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தி மாநில அளவில் 2 ஆவது இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி செலுத்திகொள்வதற்காக சமூகவலைதளங்கள், ஊடகங்கள் மூலமாகவும், உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 94.4 சதவீதம் பேரும், இரண்டு தவணை தடுப்பூசியை 72.75 சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனா்.

மாநில அளவில் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டம் 2 ஆவது இடத்தில் உள்ளது என்றாா்.

மெகா தடுப்பூசி முகாம்:

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 402 மையங்கள், மாநகராட்சியில் 145 மையங்கள் என 548 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதில், 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும்,

இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருப்பவா்களும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தவறாமல், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com