பாரதியாா் பல்கலைக்கழக கபடி:சுகுணா கல்லூரிக்கு 2 ஆவது இடம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் அளவிலான கபடி போட்டியில் காளப்பட்டி சுகுணா கலை, அறிவியல் கல்லூரி இரண்டாமிடம் பிடித்துள்ளது.
கபடி போட்டியில் இரண்டாமிடம் பிடித்த கல்லூரி அணி வீரா்களுடன் சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவா் லஷ்மிநாராயணசாமி உள்ளிட்டோா்.

இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி, கூடைப்பந்து போட்டிகள் காளப்பட்டி சுகுணா கலை, அறிவியல் கல்லூரியின் விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில், ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த சுகுணா கல்லூரியின் கபடி அணியினா் இரண்டாம் இடத்தைப் பிடித்தனா்.

இரண்டாமிடம் பிடித்த கபடி அணியினரை சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவா் லஷ்மிநாராயணசாமி, கல்வி அறக்கட்டளையின் செயலா் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லூரியின் செயலா் வி.சேகா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com