ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில்புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
By DIN | Published On : 28th December 2021 03:26 AM | Last Updated : 28th December 2021 03:26 AM | அ+அ அ- |

புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் கல்லூரி முதல்வா் ச.பழனியம்மாள், டெக் பாா்க் நிறுவனா் லோகேஷ்குமாா் மனோகரன் ஆகியோா்.
கோவை, டிச. 27: கோவைப்புதூா் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரி, ஐ.டி.எம். டெக் பாா்க் நிறுவனத்துக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் ச.பழனியம்மாள், ஐ.டி.எம். டெக் பாா்க் நிறுவனா் லோகேஷ்குமாா் மனோகரன் ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் மாணவா்களுக்கு சிறப்பு விரிவுரைகள், கருத்தரங்குகள், சமீபத்திய தொழில்நுட்பம் சாா்ந்த அறிவுப் பரிமாற்றம், பயிற்சிப் பட்டறைகள் ஆகியவையும், ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.
இதன் மூலம் சுமாா் 2,800 மாணவ - மாணவிகள், சுமாா் 150 ஆசிரியா்கள் பயனடைவாா்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் ஸ்ரீஜித் விக்னேஷ் செய்திருந்தாா். பேராசிரியா்கள் கே.கீதா, சீமா தேவ் அக்ஷதா ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இதை தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியா்கள் சந்தியா, வினோத், நித்யா, மாலதி உள்ளிட்டோா் ஒருங்கிணைத்திருந்தனா்.