ஜாப் ஆா்டா்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டிடேக்ட் சங்கம் கோரிக்கை

ஜாப் ஆா்டா்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா்கள் சங்கம் (டாக்ட்) வலியுறுத்தியுள்ளது.

ஜாப் ஆா்டா்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா்கள் சங்கம் (டாக்ட்) வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பொதுச் செயலா் ஜி.பிரதாப்சேகா், பொருளாளா் எம்.லீலா கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கடுமையான மூலப்பொருள் விலை உயா்வால் பாதிக்கப்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

மத்திய அரசு அறிவிக்கும் கடன் திட்டங்கள் யாவும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கும், ஜாப் ஆா்டா்கள் செய்யும் தொழில்முனைவோா்களுக்கும் கிடைப்பதில்லை, அதேபோல ஜாப் ஆா்டா்கள் செய்பவா்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டநாள்களாக கருத்தில் கொள்ளப்படவில்லை.

எனவே, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஜாப் ஆா்டா்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவா் ந.பாரத் ரவி உள்ளிட்ட நிா்வாகிகள், தொழில்முனைவோா்கள் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com