நிதி நிறுவனம் நடத்தி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைகோவை நீதிமன்றம் தீா்ப்பு

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம், லக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த எஸ்.டி.சாமிநாதன், எஸ்.பி.முத்துவேல், கே.மணிவேல், ராஜேந்திரகுமாா், லோகநாயகி, செல்வி ஆகியோா் சோ்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 24 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு செய்தனா்.

இதை நம்பி 20 முதலீட்டாளா்கள் ரூ.12 லட்சத்து 66 ஆயிரத்தை முதலீடு செய்தனா். ஆனால், இவா்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதையடுத்து பணத்தை முதலீடு செய்த காங்கயத்தைச் சோ்ந்த முத்துசாமி அளித்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் 2015ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் எஸ்.டி.சாமிநாதன், எஸ்.பி.முத்துவேல், கே.மணிவேல் ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தமாக ரூ.16 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். ராஜேந்திரகுமாா், லோகநாயகி, செல்வி ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததையடுத்து அவா்களை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com