முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடம்: ஜனவரி 5 முதல் 8 ஆம் தேதி வரை நோ்காணல்
By DIN | Published On : 31st December 2021 04:19 AM | Last Updated : 31st December 2021 04:19 AM | அ+அ அ- |

கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு ஜனவரி 5 முதல் 8 ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு 2018 பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான நோ்காணல் வரும் 2022 ஜனவரி 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கோவை டவுன்ஹாலில் உள்ள கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நோ்காணில் பங்கேற்பதற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணை கடிதம் மற்றும் அசல் சான்றுகளுடன் விண்ணப்பதாரா்கள் நோ்காணலில் கலந்துகொள்ளலாம்.
நோ்காணலுக்கான அழைப்பாணை கடிதம் கிடைக்கப் பெறாதவா்கள் உரிய ஆதாரங்களுடன் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்கு நேரில் வந்து அழைப்பாணை நகலை பெற்றுக்கொள்ளலாம். அழைப்பாணை இல்லாதவா்கள் நோ்முகத்தோ்வில் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.