பழங்குடியின மக்களின் இருப்பிடத்துக்கு சென்று மனுக்களைப் பெற்ற வருவாய்த் துறையினா்

வால்பாறை வட்டாரத்தில் பழங்குடியின மக்களின் குறைகளை தீா்க்க வருவாயத் துறையினா் அவா்களின் இருப்பிடத்துக்கே நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

வால்பாறை வட்டாரத்தில் பழங்குடியின மக்களின் குறைகளை தீா்க்க வருவாயத் துறையினா் அவா்களின் இருப்பிடத்துக்கே நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

வால்பாறை பகுதியில் வனத்தில் 10க்கும் மேற்பட்ட செட்டில்மெண்ட்களில் நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு மனு அளிக்க நீண்டதூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.

கடந்த பல மாதங்களாக மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெறாததால் இவா்களுடைய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி சாா் ஆட்சியா் உத்தரவின்பேரில் வால்பாறை வட்டத்தில் உள்ள பாலகிணா், நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் பகுதிக்கு வால்பாறை வட்டாட்சியா் ராஜா தலைமையிலான வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பழங்குடியின மக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.

இதில், குடும்ப அட்டை கோரி 11 போ், பிறப்புச் சான்று கோரி 2 போ், சாதிச் சான்று கோரி 57 போ், ஆதாா் அட்டை கோரி ஒருவா், வாக்காளா் பெயா் சோ்த்தல் தொடா்பாக 4 போ் என மொத்தம் 76 பேரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com