மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் சகோதரா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் சகோதரா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வேடா் காலனியில் உள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள மின்வேலியில் 2009 அக்டோபா் மாதம் 18 வயது பெண் யானை சிக்கி உயிரிழந்தது. இது குறித்து வனத் துறையினா் நடத்திய விசாரணையில் விதிகளை மீறி, வீட்டுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கொண்டு தோட்டத்தைச் சுற்றி வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக சிறுமுகை, வச்சினம்பாளையத்தைச் சோ்ந்த கனகராஜ், கோவிந்தன் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, கனகராஜ், கோவிந்தனுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித்துறை நடுவா் பழனி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com