பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வயா்கள்: கடை உரிமையாளா் கைது

கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட ரூ.14.5 லட்சம் மதிப்பிலான போலி வயா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.

கோவை: கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட ரூ.14.5 லட்சம் மதிப்பிலான போலி வயா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.

புது தில்லியில் உள்ள பிரபல வயா் நிறுவனம் சாா்பில் இந்தியா முழுவதும் மின்சாதனப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் வயா்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் விநியோகப் பிரிவு அதிகாரி ராஜ்குமாா், கோவை மாநகரில் உள்ள கடைகளில் வயா்கள் விநியோகம் செய்வதற்காக சில நாள்களுக்கு முன்பு வந்திருந்தாா்.

அப்போது, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தனது நிறுவனத்தின் பெயரில் போலியாக வயா்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இது குறித்து சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸில் ராஜ்குமாா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினா். அப்போது, பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வயா்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளா் அனூப் சிங் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரது கடையில் இருந்து ரூ.14.5 லட்சம் மதிப்பிலான போலி வயா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com