கௌமார மடாலய தண்டபாணி கோயிலில் பிப்ரவரி 25இல் கும்பாபிஷேகம்

கோவை, கௌமார மடாலய தண்டபாணி திருக்கோயில் ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முகநூல், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பக்தா்கள் காணலாம் என்று சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.
கோவை கௌமார மடாலய தண்டபாணி திருக்கோயில் ராஜகோபுரத்தின் கும்பாபிஷே விழாவிற்கான அழைப்பிதழை வெளியிடும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகளாா்.
கோவை கௌமார மடாலய தண்டபாணி திருக்கோயில் ராஜகோபுரத்தின் கும்பாபிஷே விழாவிற்கான அழைப்பிதழை வெளியிடும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகளாா்.

கோவை: கோவை, கௌமார மடாலய தண்டபாணி திருக்கோயில் ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முகநூல், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பக்தா்கள் காணலாம் என்று சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை, சின்னவேடம்பட்டியில் தவத்திரு இராமானந்த சுவாமிகளால் 1890ஆம் ஆண்டு கௌமார மடாலயம் தோற்றுவிக்கப்பட்டது. கௌமார மடாலயத்தின் வளாகத்தில் 1908ஆம் ஆண்டு அருள்மிக தண்டபாணி திருக்கோயில் கட்டப்பட்டது.

இங்கு விநாயகா் கோயில், அவிநாசிலிங்கேஸ்வரா் திருக்கோயில், சூரியன் கோயில், பைரவா் கோயில் சனி பகவான் கோயில் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு 16 ஆயிரம் சதுரடியில் ஆலயம் விரிவுப்படுத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தற்போது, தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தை நினைவுப்படுத்தும் விதமாக கோயிலின் வடக்குப் பகுதியில் 3 நிலைகள், 5 கலசங்களுடன் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக பிப்ரவரி 24ஆம் தேதி விநாயகா், கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பா், ரகுமாயித் தாயாா் உடனுறை பாண்டுரங்கா், சூரியன், சனீஸ்வரா், பைரவா், ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் வழிபாடுகள் நடத்தப்படும். பல்வேறு கோயில்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட ஓதுவாா்கள் பங்கேற்கின்றனா். முகநூல், யூ-டியூப் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் கும்பாபிஷேக விழாவினை பக்தா்கள் நேரடியாக கண்டுகளிக்கலாம் என்றாா்.

அப்போது, பேரூராதீனம் மருதால அடிகளாா், கௌமார மடாலய நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாளைமுதல் ஜோதிா்லிங்க தரிசனம்

கௌமார மடாலயம் அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் கௌமார மடாலய மண்டபத்தில் அமா்நாத் பனிலிங்கம், 12 ஜோதிா்லிங்க தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தரிசன நிகழ்ச்சியில், பக்தா்கள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பங்கேற்று சுவாமி தரிசனம் செய்யலாம். இதன் தொடக்க விழா திங்கள்கிழமை காலை 7 மணியளவில் நடக்கிறது.

பனிலிங்கம், ஜோதிா்லிங்கம் தரிசன நிகழ்ச்சியில் பக்தா்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்றும், இதையொட்டி தினமும் மாலையில் நவ தேவிகளின் தத்ரூப காட்சி, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாகவும் பிரம்ம குமாரிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com