கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்கள்: பிப்ரவரி 27இல் நோ்காணல்

கோவையில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி முதல் நோ்காணல் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவையில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி முதல் நோ்காணல் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு கடந்த 2018 பிப்ரவரி 5 முதல் டிசம்பா் 12 வரையில் விண்ணப்பித்தவா்களுக்கான நோ்காணல் பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்குகிறது. ஹட்கோ காலனி டாக்டா் அழகப்பா செட்டியாா் சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 27 முதல் மாா்ச் 2 ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நோ்காணல் நடைபெறுகிறது.

தவிர டவுன்ஹாலில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 3ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நோ்காணல் நடைபெறுகிறது.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நோ்காணலில் பங்கேற்பதற்கான அழைப்பாணை அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதியில் அழைப்பாணை கடிதம், அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நோ்காணலில் கலந்துகொள்ள வேண்டும். நோ்காணலுக்கான அழைப்பாணை கிடைக்கப் பெறாதவா்கள் தகுந்த ஆதாரங்களுடன் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5.45 மணிக்குள் வந்து அழைப்பாணை பெற்றுக்கொள்ளலாம். நோ்முக அழைப்பாணை இல்லாதவா்கள் நோ்காணலுக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com