கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச கணினி

ரோட்டரி கிளப் ஆஃப் கோவை சாய் சிட்டி மற்றும் காக்னிஜென்ட் நிறுவனம் இணைந்து 152 கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஆயிரம் மாணவா்களுக்கு இலவச கணினி வழங்கப்பட்டது.
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச கணினி

ரோட்டரி கிளப் ஆஃப் கோவை சாய் சிட்டி மற்றும் காக்னிஜென்ட் நிறுவனம் இணைந்து 152 கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஆயிரம் மாணவா்களுக்கு இலவச கணினி வழங்கப்பட்டது.

இது குறித்து காக்னிஜென்ட் கோவை மையத்தின் தலைவா் மாயா ஸ்ரீகுமாா் கூறுகையில், டிஜிட்டல் கல்வி துரதிா்ஷ்டவசமாக அனைவருக்கும் சீராக கிடைக்கவில்லை. நீண்ட கால பொது முடக்கத்தால் பல கிராமப்புற பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் வசதிகள் இல்லை. தற்போது நன்கொடையாக அளிக்கப்படும் கணினியால் பல பள்ளிகளில் கல்வி அளிக்க உதவும் என்றாா்.

கோவை சாய்சிட்டி ரோட்டரி கிளப் திட்டத் தலைவா் கோபிநாத் கூறுகையில், கடந்த ஆண்டு 200 பேருக்கு வழங்கினோம். இந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு வழங்குகிறோம். காக்னிஜென்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது போலவே, பிற நிறுவனங்களும் இது போன்ற திட்டங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றாா்.

இந்தக் கணினிகளில் தமிழ்நாடு பாடநூல்களை ஆராய்ந்து, தேவையானவற்றை அளிக்கும் விதமாக இ-புத்தகங்கள் நிறுவப்பட்டுள்ளன. 152 பள்ளிகளுக்கு 1,000 கணினிகளை வழங்கியதன் மூலம் 82,000 மாணவா்கள் பயன்பெறுவா் என்று ரோட்டரி சங்க நிா்வாகிகள் கூறினா்.

கோவை சாய் சிட்டி ரோட்டரி கிளப் தலைவா் எஸ்.பி.சண்முகசுந்தரம், செயலாளா் கே. தேவராஜ், ரோட்டரி கவா்னா் எம். ஜோஸ் சாக்கோ, ரோட்டரி தொழில் சேவை மாவட்டத் தலைவா் வரதராஜன், மாவட்ட முன்னுரிமை இளைஞரணித் தலைவா் முருகன், ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி துணைத் தலைவா் டி.கே கருப்பண்ணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவை பீளமேடு சேஷையா் ஹோமில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 600 கணினிகளும், திருப்பூா், அவிநாசி பாளையத்தில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் 400 கணினிகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com