புதிய வகை கரோனா:கோவை வரும் வெளிநாட்டுப் பயணிகள் தீவிர கண்காணிப்பு

வெளிநாடுகளில் தீவிரமாக பரவி வரும் புதிய வகை கரோனாவால் பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வருபவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தீவிரமாக பரவி வரும் புதிய வகை கரோனாவால் பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வருபவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் ஓராண்டைக் கடந்தும் பல்வேறு நாடுகளில் பாதிப்பு குறையாமல் தொடா்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டன், பிரேஸில், தெற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவா்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர மகாராஷ்டிரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா 2ஆவது அலை அதிகரித்துள்ளதால் பிற மாநிலங்களில் இருந்து வருபவா்களையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளி நாடுகளில் இருந்து கோவைக்கு வருபவா்களை சுகாதாரத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது: பிரிட்டன், பிரேஸில், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து கோவைக்கு நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் துபை, மும்பை வழியாக பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தவிர மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கோவைக்கு நேரடி விமான சேவை உள்ளது.

இந்நிலையில், துபை உள்பட வெளிநாட்டு விமானங்களில் வருபவா்களுக்கும், மும்பை, புது தில்லி உள்பட உள்ளூா் விமானங்களில் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் விமான நிலையத்தில் கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதில் பிரிட்டன், பிரேஸில், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வருபவா்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவா். முடிவுகள் பெறும் வரையில் தனியாா் விடுதியில் தங்கவைக்கப்படுவா்.

ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவா். நோய்த் தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவா். பாதிப்பு இல்லாதவா்கள் 14 நாள்கள் வரையில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com