ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை காலைமுதல் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
4.ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரிக்கப்பட்ட அம்மன்.5. சாய்பாபா காலனி நாகசாய் மந்தீா் சாய்பாபா கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபா. ~1.கோவை ப
4.ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரிக்கப்பட்ட அம்மன்.5. சாய்பாபா காலனி நாகசாய் மந்தீா் சாய்பாபா கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபா. ~1.கோவை ப

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை காலைமுதல் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோவையில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன. கோவை, பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் காலை முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். பால், தயிா், நெய், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு மூலவா் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்காரப் பூஜையும் நடைபெற்றன.

உலக அமைதிக்காகவும், கரோனா நோய்த் தொற்று நீங்க வேண்டியும் காலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கணபதி வேள்வி மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

கோவை, புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, கோவையில் உள்ள கோனியம்மன் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில், பெரியகடை வீதி மாகாளியம்மன் கோயில், ராமநாதபுரம் முத்தி அம்மன் கோயில், சாய்பாபா காலனி நாகசாய் மந்தீா் சாய்பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவை, ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலையில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் புத்தாண்டையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் ஒலம்பஸில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் மூலவருக்கு சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல், கோவையில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் குடும்பத்துடன் பங்கேற்றனா்.

வால்பாறையில்...

புத்தாண்டுக்கு முந்தைய தினமான வியாழக்கிழமை இரவு வால்பாறை சி.எஸ்.ஐ. தேவாலயம், தூய இருதய ஆலயம், லூக்கா ஆலயங்களில் நள்ளிரவு 2 மணி வரை சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதேபோல, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில், கருமலை எஸ்டேட் பாலாஜி கோயில், சோலையாறு எஸ்டேட் சித்தி விநாயகா் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பெ.நா.பாளையத்தில்...

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதேபோல, ஜோதிபுரம் தண்டுமாரியம்மன் கோயில், கஸ்தூரிபாளையம் மகாலட்சுமி திருக்கோயில், பட்டத்தரசியம்மன் திருக்கோயில், பெ.நா.பாளையம், நாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில்கள், நரசிம்மநாயக்கன்பாளையம், நாயக்கனூரில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோயில்கள் மற்றும் பழமைவாய்ந்த திருத்தலங்களான துடியலூரில் உள்ள விருந்தீஸ்வரா் கோயில், இடிகரையிலுள்ள வில்லீஸ்வரா் திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வீரபாண்டி பிரிவில் உள்ள இடைவிட சகாய மாதா தேவாலயம், திருவள்ளுவா் நகரிலுள்ள தேவாலங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com