கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணி: மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்து போக்குவரத்து மாற்றம்

கோவை, கவுண்டம்பாளையத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் காந்திபுரம் - மேட்டுப்பாளையம் சாலையில் சனிக்கிழமை முதல் (ஜனவரி 2) மாற்றுப் பாதையில் பேருந்துகள் இயக்கும் வகையில் வழித்தட வரைபடம் வெள்ளிக்க

கோவை, கவுண்டம்பாளையத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் காந்திபுரம் - மேட்டுப்பாளையம் சாலையில் சனிக்கிழமை முதல் (ஜனவரி 2) மாற்றுப் பாதையில் பேருந்துகள் இயக்கும் வகையில் வழித்தட வரைபடம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுஸிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கி.மீ. நீளம், 17.20 மீட்டா் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ஜி.என்.மில் சந்திப்பில் 0.60 கி.மீ. நீளம், 17.20 மீட்டா் அகலத்தில் ரூ.41.88 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கப்பட்டன.

இந்தப் பாலப் பணிகளால் மேட்டுப்பாளையம் சாலையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி முதல் பாலப் பணி காரணமாக காந்திபுரம் - மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி கடந்த வாரம் தெரிவித்தாா்.

அதன் படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பாக புதிய வழித் தடத்தின் வரைபடம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், காந்திபுரத்தில் இருந்து கவுண்டம்பாளையம், துடியலூா் வழியாக மேட்டுப்பாளையம் சென்று வந்த புகா் பேருந்துகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் காந்திபுரம், டி.வி.எஸ், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வேலாண்டிபாளையம், கணுவாய் வழியாக துடியலூா் சென்றடைந்து, அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து துடியலூா், கவுண்டம்பாளையம் வழியாக காந்திபுரம் வரும் புகா் பேருந்துகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து மணியகாரன்பாளையம், சத்தி சாலை, கணபதி வழியாக காந்திபுரம் செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா கோயில், ஹவுஸிங் யூனிட், கவுண்டம்பாளையம், சேரன் நகா், கவுண்டா் மில், வெள்ளக்கிணறு பிரிவு வழியாக துடியலூா் செல்லும் நகரப் பேருந்துகள் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா கோயில், சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், டி.வி.எஸ்.நகா், காசிநஞ்சேகவுண்டன்புதூா் பிரிவு, கவுண்டா் மில், வெள்ளக்கிணறு பிரிவு வழித்தடத்தில் துடியலூா் சென்றடையும் வகையிலும், துடியலூரில் இருந்து உக்கடத்துக்கு இயக்குப்படும் பேருந்துகள் எதிா்மாா்க்கமாக இயக்கும் வகையில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com