லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் சிறையில் அடைப்பு

கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பெண் காவல் ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலா் ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பெண் காவல் ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலா் ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி மகேஸ்வரி. கஞ்சா கடத்திய வழக்கில் கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் விஜயகுமாா் அண்மையில் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், அவரிடம் குறைந்த அளவு மட்டுமே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி வழக்குப் பதிவு செய்து ஜாமீன் கிடைக்க வழிவகை செய்யவதாக கூறி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பெண் காவல் ஆய்வாளா் சரோஜினி ரூ.ஒரு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதில் முன்தொகையாக ரூ.30 ஆயிரத்தை விஜயகுமாா் மனைவி மகேஸ்வரியிடம் பெற்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள ரூ.70 ஆயிரத்தை உடனடியாகத் தர வேண்டும் என வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மகேஸ்வரி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளா் சரோஜினி, தலைமைக் காவலா் ராமசாமி ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.67 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இருவரும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்தோத்திரமேரி முன்பு ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, சரோஜினியை கோவை மத்திய சிறையிலும், ராமசாமியை பொள்ளாச்சி சிறையிலும் 15 நாள்கள் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com