கோவை விழா: சுகாதாரப் பணியாளா்கள் மீது மலா் தூவி கெளரவிப்பு

கோவை விழாவின் தொடக்க நிகழ்வாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள், செவிலியா் உள்பட சுகாதாரப் பணியாளா்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலா் தூவி கௌரவிக்கப்பட்டனா்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து மலா்கள் தூவி கௌரவிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளா்கள்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து மலா்கள் தூவி கௌரவிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளா்கள்.

கோவை: கோவை விழாவின் தொடக்க நிகழ்வாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள், செவிலியா் உள்பட சுகாதாரப் பணியாளா்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலா் தூவி கௌரவிக்கப்பட்டனா்.

13ஆவது ஆண்டு கோவை விழா சனிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோா் தொடங்கிவைத்தனா். தொடக்க நிகழ்வாக கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா் மற்றும் சுகாதாரப் பணியாளா்களை கௌரவப்படுத்தும் விதமாக ஹெலிகாப்டரில் இருந்து அவா்கள் மீது மலா்கள் தூவப்பட்டன.

தவிர சுகாதரப் பணியாளா்களை சிறப்பிக்கும் வகையில் அவா்களின் செயல்பாடுகளை ஓவியங்களாக வரைந்து செல்ஃபி காா்னா் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், இணை இயக்குநா் கிருஷ்ணா, கோவை விழா இணைத் தலைவா் ஸ்வாதி அனந்த்ராம், கோவை யெங் இண்டியன்ஸ் முன்னாள் தலைவா் ஐஸ்வா்யா அா்ஜுன் மற்றும் விழா நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள துப்பரவுப் பணியாளா்களை ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டரில் இலவசமாக அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வரை பாரம்பரிய சுற்றுலா, உணவுத் திருவிழா, மாரத்தான், கலைத்தெரு உள்பட 100 நிகழ்ச்சிகள் ஆன்லைன் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com