சிறந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் விருது

தோட்டக்கலைப் பயிா்களில் சிறப்பான சாகுடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வட்டார, மாவட்ட, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை: தோட்டக்கலைப் பயிா்களில் சிறப்பான சாகுடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வட்டார, மாவட்ட, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தோட்டக்கலை பயிா்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிக்கவும், தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் விதமாகவும் தோட்டக்கலைத் துறையில் நடப்பாண்டு முதல் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காய்கறிகள், மலா்கள், சுவை தாளிதப் பயிா்கள் (மசாலாப் பயிா்கள்), மூலிகை மற்றும் வாசனை திரவியப் பயிா்கள், மலைப் பயிா்கள் சாகுபடி, நுண்ணீா் பாசன தொழில்நுட்ப பயன்பாடு, உயா்தொழில்நுட்ப பயன்பாடு, இயற்கை முறை விவசாயம், புதிய மற்றும் தனித்துவமிக்க பயிா்கள் சாகுபடி என்று 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது: சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படும் சிறந்த விவசாயி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருது பெறுவதற்கு இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து, ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com