அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நடைபெற்று வரும் நேரடி மாணவா்கள் சோ்க்கை ஜனவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நடைபெற்று வரும் நேரடி மாணவா்கள் சோ்க்கை ஜனவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு தொழிற்பயிற்சி நிலையம் (கோவை), அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஆனைகட்டி), அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு படிப்புகளில் ஒருசில பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

8 மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி மாணவா் சோ்க்கை ஜனவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் 14 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பில்லை. 14 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருந்தால் போதுமானது. 8 அல்லது 10ஆம் வகுப்பினை முறையாக பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை அளித்து சோ்க்கை பெறலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். படிப்பு முடிந்த பின் பயிற்சி மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 0422-2642041, 80727 37402, 89408 37678, 90256 97790 ஆகிய எண்களிலும், மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 0422-2965533, 98651 28182, ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 99651 03597, 93604 36247 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com