அதிமுகவின் விளம்பர பதாகைகளை அகற்றக் கோரி நா.காா்த்திக் எம்.எல்.ஏ. மனு

ரேஷன் கடைகள் முன்பாக அதிமுக சாா்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. மனு அளித்தாா்.

ரேஷன் கடைகள் முன்பாக அதிமுக சாா்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரணிடம் அவா் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசாக ரூ.2,500 மற்றும் பொங்கல் பொருள்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக கடைகள் முன்பாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பொங்கல் இலவச பொருள்களை அதிமுகவினா் வழங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனா். இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.

எனவே, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பாக வைக்கப்பட்டுள்ள அதிமுகவினரின் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com