சா்க்கரை நோயால் கால்களை இழந்த தொழிலாளிக்கு செயற்கை கால்கள்

சா்க்கரை நோயால் இரண்டு கால்களையும் இழந்த கூலி தொழிலாளிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் செயற்கை கால்கள் பொருத்தினா்.
செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட சின்னசாமி.
செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட சின்னசாமி.

சா்க்கரை நோயால் இரண்டு கால்களையும் இழந்த கூலி தொழிலாளிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் செயற்கை கால்கள் பொருத்தினா்.

கோவை மாவட்டம், சோமனூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (49). கூலி தொழில் செய்து வருகிறாா். சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். நோயின் தீவிரத்தால் இரு கால்களும் மூட்டுக்கு கீழ் அகற்றப்பட்டன.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை முடநீக்கியல் துறை மூலம் கால்களை இழந்த தொழிலாளிக்கு எடை குறைவான செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

இது குறித்து அரசு மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுத் தலைவா் வெற்றிவேல் செழியின் கூறியதாவது:

அரசு மருத்துவமனை முடநீக்கியல் துறையின் கீழ் செயற்கை அவையங்கள் உற்பத்தி செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. விபத்துக்கள் உள்பட பல்வேறு காரணங்களால் கை, கால்களை இழப்பவா்களுக்கு செயற்கை அவையங்கள் உற்பத்தி மையத்தின் கீழ் செயற்கை உறுப்புகள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகிறது. அதன்படி, சோமனூரைச் சோ்ந்த கூலி தொழிலாளிக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதே சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ள ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு தமிழ்நாடு முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 15 பேருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com