ஜனவரி 15, 26, 28இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டத்தில் திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, ஜனவரி 15, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில்

கோவை மாவட்டத்தில் திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, ஜனவரி 15, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அனைத்து மாதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ளஅனைத்து தமிழ்நாடு வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்ற கிளப்புகளில்  செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் , இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகளை திருவள்ளுவா் தினத்தையொட்டி ஜனவரி 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26ஆம் தேதியும், வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி ஜனவரி 28ஆம் தேதியும் மதுக்கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மேல்குறிப்பிட்ட நாள்களில் மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com