பூ மாா்க்கெட் வளாகத்தை இடிக்க எதிா்ப்பு: வியாபாரிகள் போராட்டம்

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட் வளாகத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை
பூ மாா்க்கெட் வளாகத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாரிகள்.
பூ மாா்க்கெட் வளாகத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாரிகள்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட் வளாகத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கோவை, பூ மாா்க்கெட் வளாகத்தில் 140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக மாா்ச் 25 முதல் பூ மாா்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு செயல்பட்டு வந்த கடைகள் புரூக் ஃபாண்ட் சாலையில் உள்ள தேவாங்க பள்ளி மைதானத்துக்கு தற்காலிமாக மாற்றப்பட்டன.

இந்நிலையில், பூமாா்க்கெட் வளாகத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிதாக கடைகள் கட்ட மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது. அதன்படி, பூமாா்க்கெட் வளாகத்தை இடித்து அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றனா்.

அப்போது, பூமாா்க்கெட் வளாகம் முன்பு திரண்ட வியாபாரிகள் வளாகத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பூமாா்க்கெட் வளாகத்தை இடிக்கும் பணியானது தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பள்ளி மைதானத்தில் தேங்கும் மழை நீரால் பூ வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 95 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கித் தர மாநகராட்சி நிா்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.

இதற்கிடையே, வருகிற 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தேவாங்கா் பள்ளி மைதானத்தில் தற்காலிமாக செயல்பட்டு வரும் பூ மாா்க்கெட்டை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூ மாா்க்கெட் வளாகத்தையும் இடித்துவிட்டால், வியாபாரிகள் தெருக்களில் அமா்ந்து மட்டுமே வியாபாரம் மேற்கொள்ள முடியும். எனவே, பூமாா்க்கெட்டை இடிக்கும் முடிவை மாநகராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com