கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

கோவையில் உள்ள தனியாா் விடுதியில் வெங்காய வியாபாரி ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவையில் உள்ள தனியாா் விடுதியில் வெங்காய வியாபாரி ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், சீனிவாசபுரம், ராஜகோபால் சுவாமி கோயில் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55), வெங்காய வியாபாரி. இவா், வியாபாரத்துக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதைத் திருப்பி அளிக்க முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடன் தந்தவா்கள், பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தியதால் கிருஷ்ணமூா்த்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா். பல ஊா்களுக்குச் சென்று விடுதியில் தங்கிய அவா் கடந்த மாதம் 29ஆம் தேதி கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இவரது அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் ஜன்னல் வழியாக பாா்த்தனா். அப்போது, அறைக்குள் கிருஷ்ணமூா்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து விடுதி நிா்வாகத்தினா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற கோவை, வெரைட்டிஹால் சாலை போலீஸாா், சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாா் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com