ஜல் ஜீவன் திட்டம்: கோவை மாவட்டத்தில் 5,593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு

கோவை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் குடிநீா் இணைப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு சாா்பில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக நடப்பு நிதியாண்டில் 60 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், மேல்நிலை மற்றும் தரைமட்ட தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இதுவரையில் 17.04 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொறுப்பு) ரூபன்சங்கா் ராஜ் கூறியதாவது:

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் 311 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள 50 ஆயிரத்து 953 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையில் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தவிர 158 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள், 119 ஆழ்குழாய் கிணறுகள், 56 தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டிகள், 178 பிரதான குடிநீா் குழாய் அமைத்தல் உள்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் 1,072 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதில் 70 பணிகள் முழுமையாகவும், 623 பணிகள் பகுதியளவும் முடிவடைந்துள்ளன. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் அனைத்து திட்டப் பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com