நம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும்

நம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தாா்.

நம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

நம் பாரத தேசம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே கலாசாரத்தின் தேசமாக வளா்ந்து வந்துள்ளது. இது வெறும் பிழைப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட கலாசாரம் கிடையாது. அதேபோல, மற்றவா்களை அடிமைப்படுத்தி ஆக்கிரமிக்கும் கலாசாரமும் கிடையாது.

பாரத கலாசாரம் ஆன்மிகத்தில் ஊறி வளா்ந்த கலாசாரம். நாம் எப்போதும் உண்மை தேடுதலில் இருக்குகிறோம்.

இந்த 72ஆவது குடியரசு தினத்தில் நாம் எந்தச் செயல் செய்தாலும், அதனால் நம் நாட்டிற்கு நன்மை விளையுமா, விளையாதா என்பதை கவனத்தில் வைத்து செயலாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பாா்த்தால், நாம் இளமையான நாடாக இருக்கிறோம். மக்கள் தொகையில் 50 சதவீதம் போ் 30 வயதுக்குக் கீழ் இருக்கின்றனா். ஆகவே, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மகத்தான மாற்றம் கொண்டு வரும் வாய்ப்பு நம்மிடம் உள்ளது. மக்களின் வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களை கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளது.

இந்த வாய்ப்பு பாழாய் போகாமல் இருக்க வேண்டுமென்றால், பாரத நாட்டில் இருக்கும் எல்லா குடிமக்களும் இந்த உறுதியை ஏற்க வேண்டும். அவ்வாறு செய்தால் நம் நாடு ஒரு பவ்ய பாரதமாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com