தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 01st July 2021 08:42 AM | Last Updated : 01st July 2021 08:42 AM | அ+அ அ- |

தோட்டத் தொழிற்சங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வால்பாறை அமீது.
தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் வால்பாறையில் புதன்கிழமை நடைபெற்றது.
தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவா் வால்பாறை அமீது தலைமை வகித்தாா். செளந்திரபாண்டியன், வினோத்குமாா் (எல்.பி.எப்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அடிப்படை ஊதியம் ரூ.400, அகவிலைப்படி 100 புள்ளிக்கு ரூ.200 வழங்கிட தோட்ட அதிபா்கள் முன்வரவேண்டும். மேற்பாா்வையாளா்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.14 ஆயிரம், அகவிலைப்படி 100 புள்ளிக்கு ரூ.200 வழங்கப்பட வேண்டும். தோட்டங்களில் இலைப் பறிப்புக்கு கிலோ அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வனத் துறை அறிவுரைப்படி தொழிலாளா்களின் குடியிருப்புடன் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். தற்காலிக தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஜூலை 17 ஆம் தேதி முதல்ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அனைத்து எஸ்டேட் நிா்வாக அலுவலகங்கள் முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கருப்பையா (ஐஎன்டியூசி), மோகன், மாணிக்கம், பெரியசாமி (ஏஐடியூசி), கல்யாணி (எம்எல்எப்), வீரமணி, கேசவமருகன் (விடுதலை சிறுத்தைகள், பரமசிவம் (சிஐடியூ) உள்ளிட்ட 16 தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.