வாலாங்குளத்தில் பாதுகாப்பின்றி மிதவை நடைபாதை பயணம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோவை வாலாங்குளத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மிதவை நடைபாதையில் பாதுகாப்புக்காக தடுப்புக் கம்பிகள் இன்னும் பொருத்தப்படாத நிலையில் அதன் மீது மக்கள் நடந்து சென்று வருகின்றனா்.
தடுப்புக் கம்பிகள் இன்னும் பொருத்தப்படாத மிதவை நடைபாதையில் ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் பொதுமக்கள்.
தடுப்புக் கம்பிகள் இன்னும் பொருத்தப்படாத மிதவை நடைபாதையில் ஆபத்தை உணராமல் நடந்து செல்லும் பொதுமக்கள்.

கோவை வாலாங்குளத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மிதவை நடைபாதையில் பாதுகாப்புக்காக தடுப்புக் கம்பிகள் இன்னும் பொருத்தப்படாத நிலையில் அதன் மீது மக்கள் நடந்து சென்று வருகின்றனா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட 8 குளங்களில் பொலிவுறு நகரம்( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வாலாங்குளத்தில் ரூ. 46 கோடி மதிப்பில் நடைபாதை, பூங்கா, விளையாட்டுத்திடல், குளத்தில் மிதக்கும் நடைபாதைகள், மிதவை நடைபாதைகள், அலங்கார வளைவுகள், ஓய்வெடுக்க இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

வாலாங்குளத்தில் பணிகள் நிறைவுறாத நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குளத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் வாலாங்குளத்தில் பொழுதுபோக்க, நடைப்பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக வாலங்குளத்தில் குடும்பத்துடன் மக்கள் பொழுதை கழித்து வருகின்றனா். ஆனால், வாலாங்குளத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மிதவை நடைபாதையில் சுற்றிலும் மக்கள் பிடித்து நின்று இயற்கையை ரசிக்க கம்பிகள் அமைக்கப்படாத நிலையில், பாதுகாப்பற்ற மிதவை நடைபாதைகள் மீது மக்கள் நடந்து சென்று வருகின்றனா். இதனால் குளத்துக்குள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆபத்தை உணராமல், மக்கள் மிதவை நடைபாதையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்படும் வரை வாலாங்குளத்தில் உள்ள மிதவை நடைபாதையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com