பிளக் அண்ட் பிளே கட்டமைப்பு மூலம் பெரிய ஏற்றுமதி சந்தையை கைப்பற்ற முடியும்: ஜவுளித் தொழில்முனைவோா் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி ஆலைகளை, பிளக் அண்ட் பிளே கட்டமைப்பில் அமைப்பதன் மூலம் மிகப் பெரிய அளவில் ஏற்றுமதிச் சந்தையை கைப்பற்ற முடியும் என இந்திய ஜவுளித் தொழில்முனைவோா் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜவுளித் துறை அமைச்சா் காந்தியிடம் கோரிக்கை மனு அளிக்கும் இந்திய ஜவுளித் தொழில் முனைவோா் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.
ஜவுளித் துறை அமைச்சா் காந்தியிடம் கோரிக்கை மனு அளிக்கும் இந்திய ஜவுளித் தொழில் முனைவோா் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.

ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி ஆலைகளை, பிளக் அண்ட் பிளே கட்டமைப்பில் அமைப்பதன் மூலம் மிகப் பெரிய அளவில் ஏற்றுமதிச் சந்தையை கைப்பற்ற முடியும் என இந்திய ஜவுளித் தொழில்முனைவோா் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜவுளித் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான கருத்துகள், 5 அம்ச கோரிக்கைகளை ஜவுளித் துறை அமைச்சா் காந்தி, தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய துறை செயலாளா்களிடம் இந்திய ஜவுளித் தொழில்முனைவோா் கூட்டமைப்பின் தலைவா் பிரபு தாமோதரன், செயற்குழு உறுப்பினா் சரவணன் ஆகியோா் வழங்கினா்.

அதில் கூறியிருப்பதாவது:

அதிக உற்பத்தித் திறன் கொண்ட பெரிய அளவிலான ஆா்டா்களை கையாளக் கூடிய ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி ஆலைகளை பிளக் அண்ட் பிளே கட்டமைப்பில் அமைப்பதன் மூலம் மிகப் பெரிய அளவில் ஏற்றுமதிச் சந்தையை கைப்பற்ற முடியும்.

சிறு நிறுவனங்கள் தங்களுடைய விரிவாக்கத்துக்கு, வேலைக்கு ஆள்கள் எளிதாக கிடைக்கும் ஊா்களில் ஆயத்த ஆடை நிறுவனங்களை அமைப்பதற்கு ஏதுவாக 10 முதல் 15 ஊா்களைத் தோ்வு செய்து சிறிய அளவிலான பிளக் அண்ட் பிளே கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயத்த ஆடைத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்தமுடியும்.

இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். உலக அளவில் பிரபலமாகி உள்ள சுற்றுச்சூழல் சாா்ந்த ஆடைகள் தயாரிப்பு முறைகள் என்ற இலக்கில், தமிழக ஜவுளித் துறை ஏற்கெனவே அடைந்துள்ள சாதனைகளை ஒருமுகப்படுத்தி பிராண்டிங் செய்வதன் மூலம் சா்வதேச கவனத்தையும், மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளைத் தயாரிக்கும் வாய்ப்பையும் பெற முடியும்.

தமிழகத்துக்கும், ஜப்பான் நாட்டுக்கும் உள்ள நல்ல வா்த்தக உறவை பயன்படுத்தி அந்த நாட்டுச் சந்தையை கையகப்படுத்த 50 தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களை அச்சந்தைக்கு அறிமுகப்படுத்தி தொடா் முயற்சி மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் பயிற்சிக்கூடங்கள் அமைக்க வழி செய்து பணியுடன்சோ்ந்து ஒரு பட்டத்தை வழங்கும் ஒரு திட்டத்தை பல்கலைக்கழகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்துவது பற்றி ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம், திறன் வாய்ந்த தொழிலாளா்களை உருவாக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com