ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை, மனநல சிகிச்சை மையம் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை, மனநல சிகிச்சை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கிவைக்கிறாா் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசுவாமி.
ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கிவைக்கிறாா் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசுவாமி.

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை, மனநல சிகிச்சை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

சென்னை புத்தி கிளீனிக்குடன் இணைந்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை, மனநல சிகிச்சை மையம், தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசுவாமி, புத்தி கிளீனிக் நிறுவனா் டாக்டா் இ.எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் குத்துவிளக்கேற்றித் திறந்துவைத்தனா்.

எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலா் ஸ்வாதி ரோஹித், தலைமைச் செயல் அலுவலா் சி.வி. ராம்குமாா், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் பி.சுகுமாரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவா்கள், உயா் அதிகாரிகள் ஆகியோா் உடனிருந்தனா்.

பழங்கால மருத்துவ முறைகளை நவீன அறிவியலில் புகுத்தி, மூளை, மனநல நோயாளிகள், நரம்பு சாா்ந்த பிரச்னைகளைக் கொண்ட நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளித்து அவா்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்த சிகிச்சை மையத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த சிகிச்சை முறை 14 வகையான மருந்தில்லா சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com