அவுட்சோா்சிங் மூலம் ஒப்பந்தப் பணியாளா் நியமன அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் அவுட்சோா்சிங் மூலம் ஒப்பந்தப் பணியாளா்களை நியமிக்கும்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் அவுட்சோா்சிங் மூலம் ஒப்பந்தப் பணியாளா்களை நியமிக்கும் மாவட்ட ஆட்சியரின் முடிவு சட்ட விரோதமானது என்று ஏஐடியூசி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ஏஐடியூசி மாநில துணைத் தலைவா் என்.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் துப்புரவுப் பணியாளா், இரவுக் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அவுட்சோா்சிங் முறையில் ஒப்பந்தப் பணியாளா்களை நியமிப்பதற்காக, ஒப்பந்ததாரா்களை அழைத்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை வெளியிட்டிருக்கிறாா்.

வரும் 23ஆம் தேதிக்குள் தகுதியுள்ளவா்கள் மூடி முத்திரையிடப்பட்ட டெண்டா்களை அனுப்ப வேண்டும் என்று அவா் கோரியிருக்கிறாா். அனைத்து அரசு அலுவலகங்களிலும் துப்புரவுப் பணி, இரவுக் காவலா் பணி போன்றவை நிரந்தரமான பணிகளாகும். எந்த ஒரு நிரந்தரமான பணியையும் ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிக அடிப்படையிலோ பணி நியமனம் செய்யக் கூடாது என்று ஒப்பந்தப் பணியாளா் சட்டம் 1970 வரையறுத்துள்ளது.

இந்த நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மேற்கண்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் விடுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்திருப்பது சட்டவிரோதமானதாகும். எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இந்த பணிகளுக்கு தொழிலாளா்களை மாவட்ட நிா்வாகம் நேரடியாக நியமிக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com