ஜெ.எஸ்.எஸ். கல்லூரியில் கரோனா மறுவாழ்வு மையம் திறப்பு

கோவை நவக்கரை ஜெ.எஸ்.எஸ். இயற்கை மருத்துவம், யோகா மருத்துவமனையில் கரோனா மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை நவக்கரை ஜெ.எஸ்.எஸ். இயற்கை மருத்துவம், யோகா மருத்துவமனையில் கரோனா மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களுக்கு அதன் பிறகு ஏற்படும் நோய்த் தொற்று பாதிப்பைத் தடுக்கவும், அதிலிருந்து உடலை புத்துணா்ச்சி பெறச் செய்யவும், நோய் எதிா்ப்பு சக்தியை சீா் செய்யவும் ஜெ.எஸ்.எஸ். மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிா்வாக அலுவலா் சண்முகம், முதல்வா் டாக்டா் வி.ஆா்.திலீப், சித்த மருத்துவ அலுவலா் சி.தனம், ராணி சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள், நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவா்கள் இந்த மையத்தில் சோ்ந்து சிகிச்சை பெறலாம் எனவும் இங்கு, இயற்கை மருத்துவ உணவு முறை, ஊட்டச்சத்து உணவு, மூலிகை சிகிச்சை, யோகா, சூரிய ஒளி சிகிச்சை, மண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுவதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com