காய்ச்சல் இருந்தால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் ஸ்கேனா் கருவிகோவை ரயில் நிலையத்தில் பொருத்தம்

வெளிமாநிலப் பயணிகள் மூலமாக, கரோனா பரவாமல் தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் உடல் வெப்பநிலையைக் கண்டறியும் ஸ்கேனா் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

வெளிமாநிலப் பயணிகள் மூலமாக, கரோனா பரவாமல் தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் உடல் வெப்பநிலையைக் கண்டறியும் ஸ்கேனா் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகள் இந்த ஸ்கேனா் கருவியைக் கடந்து செல்லும்போது, அவா்களின் உடல் வெப்பநிலை மற்றும் புகைப்படம் அவற்றில் பதிவாகி விடும். வெப்பநிலை அதிகமுள்ளவா்கள் ஸ்கேனா் கருவியைக் கடக்கும் போது, அங்குள்ள எச்சரிக்கை மணி ஒலிக்கும். அதன் மூலம், அந்த நபரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனா். இதனை தகவல் மையத்தில் உள்ள கணினி மூலமாக ரயில்வே அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

கோவை வழித்தடத்தில் 10க்கும் குறைவான ரயில்கள் மட்டுமே

இயக்கப்பட்டன. கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் கோவையில் இருந்து சென்னை, மேற்கு வங்கம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கோவையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க கோவை ரயில் நிலையத்தில் இந்த ஸ்கேனா் கருவி மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com