ஆடி மாத பிறப்பையொட்டி தண்டுமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
ஆடி மாத பிறப்பையொட்டி தண்டுமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

ஆடி மாத பிறப்பு:கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதப் பிறப்பையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாதப் பிறப்பையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கரோனா பொதுமுடக்க தளா்வுக்குப் பிறகு, தற்போது கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆடி மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோயிலில் அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல, தண்டுமாரியம்மன் கோயில், பிளேக் மாரியம்மன், கணபதி சூலக்கல் மாரியம்மன், ஆடிஸ் வீதி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் வெள்ளிக் கவச உடையில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

இதேபோல பேரூா் பச்சைநாயகி அம்மன், அங்காளம்மன், செட்டிபாளையம் மாசாணி அம்மன், சரவணம்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயிலுக்கு வந்த பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனா். மேலும், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com