மிகச்சிறந்த வேலைவாய்ப்பு வழங்கும் கொங்கு பொறியியல் கல்லூரி

கொங்கு பொறியியல் கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் சிறப்புமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி ஆகும்.

கொங்கு பொறியியல் கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் சிறப்புமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி ஆகும்.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் தரவரிசைப் பட்டியலில் (சஐதஊ) 2016ஆம் ஆண்டு முதல் சிறப்பிடம் (135 இடங்களுக்குள் ) பெற்று இக்கல்லூரி விளங்குகிறது. இக்கல்லூரியின் 9 இளங்கலைப் பொறியியல் பாடப் பிரிவுகளும் தேசிய தர நிா்ணயக் குழுவின் (சஆஅ) அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று (சஅஅஇ) அமைப்பின் மூலம் ‘ஏ’ கிரேடு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

பெருந்துறையில் இருந்து 3 கிலோமீட்டா் தொலைவில் 167 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி 23 லட்சம் சதுர அடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டடங்களை கொண்டுள்ளது.

கொங்கு பொறியல் கல்லூரியில் சுமாா் 8,500 மாணவா்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில்

(இளங்கலை பொறியியல் (ஆஉ/ஆபங்ஸ்ரீட்) மெக்கானிக்கல் , சிவில், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், கெமிக்கல், புட் டெக்னாலஜி, 3 வருட இளங்கலை பாடப்பிரிவு ஆநஸ்ரீ - கம்ப்யூட்டா் சிஸ்டம் டிசைன், இன்பாா்மஸின் சிஸ்டம் டிசைன், சாப்ட்வோ் சிஸ்டம் டிசைன், 15 முதுகலை (எம் ஈ / எம் டெக் , எம் பி ஏ, எம் சி ஏ , எம் எஸ் சி (சாப்ட்வோ் சிஸ்டம்ஸ்)) மற்றும் 16 ஆராய்ச்சி துறைகளில் பயின்று வருகின்றனா்.

மேலும் கீழ்கண்ட3 புதிய பாடப் பிரிவுகள் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றன:

ஆபங்ஸ்ரீட் - ஆா்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மெஷின் லோ்னிங், ஆா்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டா் சயின்ஸ் அண்ட் டிசைன்.

இக்கல்லூரியில் அனுபவம் வாய்ந்த 530 பேராசிரியா்கள் (255 முனைவா் பட்டம் பெற்றுள்ளனா்), 500க்கும் மேற்பட்ட ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். சிறப்பு வாய்ந்த மென்பொருள் மற்றும் டிஜிட்டல் போா்டுகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

குளிரூட்டப்பட்ட, தரம் வாய்ந்த நூலகம், 4500 போ் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட பல்கலை மையம், 15 கருத்தரங்கக்கூடங்கள், உள் விளையாட்டரங்கம் (ஜிம் வசதியுடன்), உணவுக் கூடம், மாணவா்களுக்கான 7 விடுதிகள், மாணவிகளுக்கான 3 விடுதிகள் ஆகியவை அமைந்துள்ளன.

ஆராய்ச்சித்துறைக்காக சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது இக்கல்லூரி. இதுவரை கல்லூரியின் 14 தயாரிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இக்கல்லூரி பேராசிரியா்களின் கண்டுபிடிப்புகள் 2625 ஸ்கோப்பஸ் இண்டெக்ஸ்டு ஜா்னல் 861 ரா்ந இண்டெக்ஸ்டு ஜா்னல் ஆகியவற்றில் வெளியிடப்பட்டு உள்ளன. இதனுடன் 135 புத்தகங்களையும் இக்கல்லூரி பேராசிரியா்கள் எழுதி உள்ளனா். மேலும் 29 கோடி அளவில் மானியத்தை, அஐஇபஉ, மஎய , ஈநப, இநஐத , ஈஐப போன்ற அரசு நிறுவனங்கள் மூலம் ஆராய்ச்சி பணிக்காக இக்கல்லூரி பெற்றுள்ளது.

தொழிற்சாலைகளுடனான கல்லூரியின் தொடா்பை ஊக்குவிக்கும் பொருட்டு ஐஐடஇ என்ற தனி அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு ஆலோசனை வழங்குதல், தொழிற்சாலைகளில் சோதனை செய்தல் ஆகியவை நடைபெறுகின்றன. சென்னையில் உள்ள கல்வி மற்றும் தொழில் முனைவோருக்கான அமைப்பு இக்கல்லுரிக்கு 2014, 2015, 2016 ஆண்டுகளில் விருது வழங்கி உள்ளது.

இக்கல்லூரியில் “ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேசன்என்ற துறையில் “பனுக் இந்திய பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்துடனும், ஸ்மாா்ட் எனா்ஜி” என்ற துறையில் ஸ்னைடா் எலக்ட்ரிக் இன்ப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் என்ற நிறுவனத்துடனும், எனா்ஜி ஸ்டடீஸ்” என்ற துறையில் ப்ளூக் காா்பொரேஷன் , யூஎஸ்ஏ என்ற நிறுவனத்துடனும், டேட்டா சயின்ஸ்” என்ற துறையில் என்விடா காா்ப், யூஎஸ்ஏ” என்ற நிறுவனத்துடனும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டு சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சென்ற கல்வி ஆண்டில், 200க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில், இக்கல்லூரியில் பயின்ற 1,020 மாணவா்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா்.

இக்கல்லூரியில் நோ்காணலுக்கு வரும் நிறுவனங்கள் பின்வருமாறு:

காக்னிசென்ட், இன்போசிஸ், ஆக்சன்சா், விப்ரோ, ஜோகோ, ஆரக்கிள் இன்க், அமேசான், ஐபிஎம், டிசிஎஸ், சாலிட்டான், கோடா குளோபல், சிரியஸ் கம்ப்யூட்டா் சொல்யூசன், இன்பா்மடிகா, அஜிரா, டிரம்புள் இன்க், எல் அண்ட் டி இன்போடெக், எமா்சன் பிஷா் இன்ஜினீரிங், பிரக்ஸ் இந்தியா, டைட்டான், அசோக் லேலாண்ட், ராபா்ட் போஸ், ரெனால்டு நிசான், ஹூண்டாய், சன்மாா், டபே லிமிடெட், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வேதாந்தா லிமிடெட், ஹனிவெல், டெல்பி டீவிஎஸ், யூஆா்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், பிரிட்டானியா, ரானே, பனுக், ஹட்ஸன் அக்ரோ, கேபிஆா் லிமிடெட், ஸ்பிக்.

கொங்கு பொறியியல் கல்லூரியின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா் என்ற அமைப்பு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்திடமிருந்து சுமாா் ரூ.4 கோடியை மானியமாக பெற்றுள்ளது. இதன் மூலம் 92 இளம் தொழில் முனைவோா் பலன் பெற்றுள்ளனா். இக்கல்லூரி என்எஸ்எஸ் அமைப்பு சிறந்த என்எஸ்எஸ் அமைப்பாக 2015 இல் தோ்வு செய்யப்பட்டது.

பல்வேறு விருதுகளை கொங்கு பொறியியல் கல்லூரி பெற்றிருந்தாலும் , மணிமகுடமாக உள்ள சில விருதுகள் பின்வருமாறு : ஐநபஉ யிடமிருந்து சிறந்த பொறியியல் கல்லூரி விருது (2001), ஐநபஉ யிடமிருந்து சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வா் விருது (2000&2013), அஐஇபஉ யிடமிருந்து சிறந்த தூய்மையான வளாகம் விருது (2017), ஙஏதஈ யிடமிருந்து உயா் கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது தூய்மையான கல்லூரி விருது (2019), ஒரு மாணவன் ஒரு மரம் என்பதை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு சான்றிதழ், ஜல் சக்தி அபியான் மற்றும் சிறந்த தூய்மை வளாகம் விருது (2019).

மேலும் கொங்கு வேளாளா் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளையின் மூலம் கொங்கு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லுரி, கொங்கு ஐடிஐ, கொங்கு ஸ்கூல் ஆப் ஆா்கிடெக்சா் ஆகிய கல்வி நிறுவனங்களும் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com