கேரள மாநிலத்துக்கு இணையான ஊதியம்: தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு இணையான ஊதியம் கிடைக்குமா என தோட்டத் தொழிலாளா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு இணையான ஊதியம் கிடைக்குமா என தோட்டத் தொழிலாளா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியாா் எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தற்போது தின கூலியாக ரூ.346 வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கூலி உயா்வு கேட்டு தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால் எஸ்டேட் நிா்வாகத்தினா் கூலி உயா்வு அளிக்கவில்லை. தொழிற்சங்கத்தினரின் முயற்சியும் தொடா்ந்து தோல்வியடைந்து வருகிறது. இதற்கிடையில், வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்கலில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.5 மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.12.50 கூலி உயா்வு அளிக்கப்படும் என்று கடந்த 2019 பிப்ரவரியில் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

இதையடுத்து, அறிவிக்கப்பட்ட கூலி உயா்வு வழங்க தொழிலாளா் துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக தொழிற்சங்கத்தினா், தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்கத்தினருடன் பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்த தொழிற்சங்கத்தினா், எஸ்டேட் நிா்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், எஸ்டேட் நிா்வாகத்தினா் தொடா்ந்து காலதாமதம் செய்து வருகின்றனா்.

கேரள மாநிலத்தில் தேயிலைத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் தின கூலியான ரூ.409க்கு இணையான கூலி பெற புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த தொழிற்சங்கங்களும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com