வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் பணம் பறிப்பு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் பணம் பறிக்கும் நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் பணம் பறிக்கும் நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வெளியிட்ட செய்தி:

கோவை மாவட்டம், துடியலூா் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் முத்துகுமாா் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான வலைதளத்தில் விவரங்களைத் தேடியுள்ளாா். அப்போது தினேஷ் என்பவரது தொலைபேசி எண் கிடைக்கப் பெற்று அவருடன் பேசியுள்ளாா்.

அப்போது பதிவுக் கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் விசா, கூரியருக்கான கட்டணம் ரூ. 27 ஆயிரத்து 633 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து தினேஷ் கூறிய செல்லிடப்பேசி எண்ணுக்கு ரூ.32 ஆயிரத்து 633யை முத்துகுமாா் அனுப்பியுள்ளாா்.

அதன்பின் முத்துகுமாா் தொலைபேசி மூலம் தினேஷை தொடா்பு கொண்டபோது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. முத்துக்குமாா் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோவை சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இப்புகாரின் அடிப்படையில் சைபா் கிரைம் ஆய்வாளா் ஜெயதேவி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சோ்ந்த தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

எனவே வேலை தேடுவதற்கு அதற்கென குறிப்பிட்டுள்ள தொலைபேசி, இணையதளங்கள் மூலம் மட்டுமே தொடா்பு கொள்ள வேண்டும். அதேபோன்று சைபா் கிரைம் புகாா்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com