தனித்தோ்வா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு தனித்தோ்வா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு தனித்தோ்வா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதிலும் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டனா். இதையடுத்து தமிழகத்தில் தோ்வுகள் நடைபெறாத நிலையில், அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டனா். தற்போது பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை தனித்தோ்வா்களாக எழுத சுமாா் 1.50 லட்சம் மாணவ-மாணவிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனா். அவா்களுக்கு அக்டோபா் மாதத்தில் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தோ்வு நடத்தி நவம்பரில் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படுமானால் அவா்கள் உயா் கல்வியில் சேருவது தடைபடும்.

எனவே 10, 12 ஆம் வகுப்பு தனித்தோ்வா்களை தோ்ச்சி பெற்றவா்களாக அறிவித்து, அவா்களுக்கும் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com