சி.எஸ்.ஐ. கூட்டத்தில் வழக்குரைஞரை தாக்கிய வழக்கில் ஒருவா் கைது

கோவையில் சி.எஸ்.ஐ. திருமண்டல நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வழக்குரைஞா் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் சி.எஸ்.ஐ. திருமண்டல நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வழக்குரைஞா் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகம் உள்ளது. இதன் நிா்வாக குழுக் கூட்டம் திருமண்டல ஆயா் திமோத்தி ரவீந்தா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நிா்வாகக் குழுவில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அதன் உறுப்பினா் வழக்குரைஞா் நேச மொ்லின் புகாா் அளித்தாா்.

அப்போது அங்கு இருதரப்பினா் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பினா் வழக்குரைஞா் நேச மொ்லின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நேச மொ்லின் அளித்தப் புகாரின் பேரில் 17 போ் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் திருப்பூரைச் சோ்ந்த வில்சன் குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com