பொது வழித்தடம் ஆக்கிரமிப்பு: மலைவாழ் மக்கள் மனு

கோவை, கண்டிவழி மலைவாழ் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது வழித்தடம், நீா் நிலையை மீட்டுத்தர வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கோவை, கண்டிவழி மலைவாழ் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது வழித்தடம், நீா் நிலையை மீட்டுத்தர வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மலைவாழ் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், ஆனைக்கட்டி அருகிலுள்ள கண்டிவழி பகுதியில் 4 தலைமுறைகளாக வசித்து வருக்கிறோம். தற்போது 25 குடும்பங்கள் உள்ளன. கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. மேலும் பருவத்திற்கேற்ப மலையில் கிடைக்கும் பொருள்களை சேகரித்து வனக் குழு மூலம் விற்பனை செய்து வருகிறோம்.

இந்நிலையில் வனப் பகுதிக்கு செல்லும் வழித்தடமும், கண்டிவழி கிராமத்தில் உள்ள நீா்நிலையும் தனியாா் சாா்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. மலைக்கு செல்வதற்கு வழியில்லாமல் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்லவும், வனத்தில் பொருள்களை சேகரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com